உலக வசிப்பிட நாள் (World Habitat Day) - ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
1986 ல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படும் இந்நாளின் நோக்கம் நாம் வாழுகின்ற நகரங்களின் நிலைகள் மற்றும் அவற்றில் அடிப்படை மனித உரிமையான போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
எதிர்கால தலைமுறையினருக்கான வாழ்விடத்தின் அவசியம் குறித்து இன்றைய உலகம் மேற்கொள்ளவேண்டிய கூட்டுப் பொறுப்பை நினைவுபடுத்தும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டிற்கான உலக வசிப்பிட தினத்தின் கருத்துரு- மலிவான வீடுகள் மற்றும் வீட்டுவசதி கொள்கைகள் (Housing policy: Affordable Homes)
‘Habitat Scroll of Honour’ விருது
ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயல்திட்டத்தினால் (UNHSP- United Nations Human Settlements Programme ) மனித வாழ்விடம் தொடர்பான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது உலக வசிப்பிட தினத்தன்று வழங்கப்படுகிறது.
இது உலகில் மனித குடியேற்றத்தில் வழங்கப்படும் மிக உயரிய கெளரவமிக்க விருதாகும்.