சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
FAO ஆனது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அறிக்கையை வெளியிடுகின்றது.
இந்த அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வனப் பரவலை அதிகரித்த முதல் 10 நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இதில் சீனா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ளூர், பூர்வகுடிச் சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் வனப் பகுதியானது 1990 ஆம் ஆண்டில் 0 என்ற அளவிலிருந்து 2015 ஆம் ஆண்டில் 25 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலகமானது தனது மொத்த நிலப்பரப்பில் 31% வனப் பகுதியைக் கொண்டுள்ளது.
ரஷ்யாவானது உலக வனப்பரப்பில் 20% என்ற அளவில் அதிக அளவிலான வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து பிரேசில் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அதிக வனப் பரப்பைக் கொண்டுள்ளன.