TNPSC Thervupettagam

உலக வனஉயிரினங்கள் தினம் - மார்ச் 03

March 7 , 2023 633 days 228 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68வது அமர்வானது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை நியமித்தது.
  • இது உலகிலுள்ள வனத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1973 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் தேதியன்று தான், அருகி வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கை (CITES) என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • சர்வதேச வர்த்தகமானது இந்த இனங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த இந்த உடன்படிக்கை உதவுகிறது.
  • இந்த ஆண்டின் மார்ச் 03 ஆம் தேதியானது இந்த உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'வனவிலங்குப் பாதுகாப்புக்கான கூட்டுறவுகள் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்