TNPSC Thervupettagam

உலக வனக் கண்காணிப்பு இணைய தளத்தின் அறிக்கை

April 19 , 2024 219 days 250 0
  • உலக வனக் கண்காணிப்பு இணைய தளமானது செயற்கைக்கோள் தரவு மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி வனங்களில் ஏற்படும் ஒரு நிகழ்நேர மாற்றங்களைக் கண்காணிக்கிறது.
  • இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு முதல் சுமார் 2.33 மில்லியன் ஹெக்டேர் அளவிலான மரங்களின் பரவல் குறைந்துள்ளது என்பதோடு, இந்தக் காலக் கட்டத்தில் மரங்களின் பரவலில் ஆறு சதவிகிதம் குறைந்ததற்கு இது சமம் ஆகும்.
  • 2001 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் உள்ள காடுகள் ஆண்டுக்கு 51 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியது மற்றும் ஓராண்டிற்கு 141 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை அகற்றியது.
  • இது ஓராண்டிற்கு 89.9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான நிகர கார்பன் ஈரப்பினைக் குறிக்கிறது.
  • தேசிய சராசரியான 66,600 ஹெக்டேர்களுடன் ஒப்பிடுகையில், அசாமில் அதிக பட்சமாக 324,000 ஹெக்டேர் மரங்கள் அழிந்துள்ளது.
  • மிசோரம் மாநிலத்தில் 312,000 ஹெக்டேர் மரங்களும், அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 262,000 ஹெக்டேர் மரங்களும், நாகாலாந்தில் 259,000 ஹெக்டேர் மரங்களும், மணிப்பூரில்  240,000 ஹெக்டேர் மரங்களும் அழிந்துள்ளன.
  • GFW தளத்தின் தரவு ஆனது, 2001 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அழிந்த மரங்களின் அளவில் ஐந்து மாநிலங்கள் 60 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • இந்தியாவில் காடழிப்பு விகிதம் ஆனது, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 668,000 ஹெக்டேர் என்ற வருடாந்திர வீதத்தில் இருந்தது என்ற நிலையில் இது உலகளவில் இரண்டாவது மிக உயர்ந்த அளவாகும்.
  • 2001 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, ஒடிசா மாநிலத்தில் ஆண்டிற்கு 238 ஹெக்டேர் என்ற சராசரி இழப்புடன், தீ விபத்துகளால் ஏற்பட்ட மரங்களின் இழப்பு ஆனது அதிக விகிதத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்