உலக வளக் கழகத்தினால் (WRI) உலக வனக் கண்காணிப்பு என்ற மிகவும் புதிய ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், வெப்ப மண்டலப் பகுதிகளில் 4.1 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ள நிலையில், இது ஒரு நிமிடத்திற்கு சுமார் 11 கால்பந்து மைதானங்களின் பரப்பளவை இழப்பதற்குச் சமமாகும்.
இந்த வன இழப்பானது சுமார் 2.7 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினை உருவாக்கியது.
புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு காரணமாக இந்தியாவின் வருடாந்திர உமிழ்வுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் வெப்பமண்டலப் பகுதிகளில் ஏற்பட்ட முதன்மையான காடுகளின் இழப்பானது 2021 ஆம் ஆண்டை விட 10% அதிகமாகும்.
2030 ஆம் ஆண்டு என்ற ஒரு இலக்கினை அடைய ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10% அளவிலான உலகக் காடழிப்பினைக் குறைக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டில், உலகக் காடழிப்பு விகிதமானது, 2018-2020 ஆண்டு வரையிலான அடிப்படையினை விட 3.1% குறைவாக இருந்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் 350 மில்லியன் ஹெக்டர் காடுகளை மீட்டெடுத்தல் என்ற இலக்கை அடைய, உலக நாடுகள் 2021 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு 22 மில்லியன் ஹெக்டர் அளவில் மரங்களின் பரப்பளவினை அதிகரிக்க வேண்டும்.