"உலகளாவிய வனத்துறை கண்ணோட்டம் 2050: ஒரு நிலையான பொருளாதாரத்திற்கான எதிர்காலத் தேவை மற்றும் மரங்களின் வளங்களை மதிப்பீடு செய்தல்" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
முதன்மையான பதப்படுத்தப்பட்ட மரப் பொருட்களின் நுகர்வானது 2050 ஆம் ஆண்டில் 3.1 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
2050 ஆம் ஆண்டிற்குள் அவற்றின் தேவை 272 மில்லியன் கன மீட்டர்கள் வரை உயரக் கூடும்.
இது வளர்ந்து வரும் நாடுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளால் தொழில்துறைப் பயன்பாடு சார்ந்த மரங்களின் உற்பத்தி (IRW) பாதிக்கப்படும் என்றும் இந்த அறிக்கை கணித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், தொழில்துறை பயன்பாடு சார்ந்த மரங்களின் உற்பத்தியில் சுமார் 44 சதவீதம் மித வெப்ப மற்றும் போரியல் வகை காடுகளால் உருவாக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், எரிபொருள் பயன்பாடு சார்ந்த மரத்தின் உலகளாவிய நுகர்வு 1.9 பில்லியன் கன மீட்டராக இருந்தது.
2050 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2.1 முதல் 2.7 பில்லியன் கன மீட்டரை எட்டுவதன் மூலம் 11 முதல் 42 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.