உலக வனப் பாதுகாவலர் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இது உலகம் முழுவதிலும் வனப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வனப் பாதுகாவலர்களின் சீரிய பணிகளை அங்கீகரிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகின்றது.
இதன் நோக்கம் பூமியின் இயற்கையான பொக்கிஷங்களையும், கலாச்சார புராதனங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தாக்கப்படும் அல்லது கொல்லப்படும் வனப் பாதுகாவலர்களை கவுரவிப்பது ஆகும்.
1992ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வனப் பாதுகாவலர் கூட்டமைப்பால் (International Ranger Federation) இத்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இத்தினம் 2007ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.