TNPSC Thervupettagam

உலக வனவிலங்கு தினம் – மார்ச் 03

March 4 , 2022 907 days 351 0
  • உலகின் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • பலதரப்பட்ட பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் வனவிலங்குகள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் மனிதர்களின் செயல்களால் உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவு ஆகியவற்றிற்கு எதிராகப் போராட வேண்டியதன் ஒரு அவசியத்தை இத்தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “சூழலமைவின் மறுசீரமைப்பிற்காக முக்கிய உயிரினங்களை மீட்டெடுத்தல்” (Recovering key species for ecosystem restoration) என்பதாகும்.
  • இந்தத் தினமானது தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப் பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2013 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்