TNPSC Thervupettagam

உலக வனவிலங்கு தினம் – மார்ச் 03

March 5 , 2021 1274 days 988 0
  • உலக வனவிலங்கு தினமானது உலகின் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து விழிப்பணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவற்றைக் கொண்டாடுவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உலகம் முழுவதும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத் தன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவை ஏற்படுத்த வழிவகை செய்கின்றது.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “வனங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் : நிலையான மக்கள் மற்றும் கோள்(Forests and Livelihoods: Sustaining People and Planet) என்பதாகும்.
  • 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது நமது பூமியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிப்பதற்காகவும் வேண்டி மார்ச் 03 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் உலக வனவிலங்கு  தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்