பனாமா நகரத்தில் நடைபெற்ற CITES உடன்படிக்கைக்கான ஒப்பந்ததார நாடுகளின் 19வது மாநாட்டில் முதலாவது உலக வனவிலங்கு வர்த்தக அறிக்கை வெளியிடப் பட்டது.
இது 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடைபெறும் முதல் CITES உடன்படிக்கைக்கான ஒப்பந்ததார நாடுகளின் மாநாடு ஆகும்.
2011 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகளில் 3.5 மில்லியன் CITES பொதிகள் நேரடி வர்த்தகத்தில் மேற்கொள்ளப் பட்டதாகப் பதிவாகியுள்ளன.
இது 1.3 பில்லியன் உயிரினங்கள் மற்றும் 279 மில்லியன் கிலோ தயாரிப்புப் பொருட்கள் எடையின் அடிப்படையில் பதிவாகியுள்ளன.
ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்கள், வனவிலங்கு வர்த்தகத்தின் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர் நாடுகளாக உள்ளன.
ஆசிய நாடுகள் ஏற்றுமதிப் பரிவர்த்தனைகளில் 37 சதவீதத்தையும் இறக்குமதி பரிவர்த்தனைகளில் 31 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
உலக ஏற்றுமதி மதிப்பில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா அதிக விகிதங்களைக் கொண்டுள்ளன.
உலகளாவியச் சட்டப்பூர்வ வனவிலங்கு (CITES மற்றும் CITES சாராத) வர்த்தகத்தினால் உருவாக்கப்படும் ஆண்டு வருவாய் சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அனைத்து விலங்குகளிலும், ஊர்வன இனங்கள் மற்றும் மீன்களின் ஏற்றுமதியானது உலகளாவிய CITES ஏற்றுமதி பட்டியலின் சராசரி ஆண்டு மதிப்பில் 72 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.