TNPSC Thervupettagam

உலக வனவிலங்கு வர்த்தக அறிக்கை

November 25 , 2022 601 days 318 0
  • பனாமா நகரத்தில் நடைபெற்ற CITES உடன்படிக்கைக்கான ஒப்பந்ததார நாடுகளின் 19வது மாநாட்டில் முதலாவது உலக வனவிலங்கு வர்த்தக அறிக்கை வெளியிடப் பட்டது.
  • இது 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடைபெறும் முதல் CITES உடன்படிக்கைக்கான ஒப்பந்ததார நாடுகளின் மாநாடு ஆகும்.
  • 2011 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகளில் 3.5 மில்லியன் CITES பொதிகள் நேரடி வர்த்தகத்தில் மேற்கொள்ளப் பட்டதாகப் பதிவாகியுள்ளன.
  • இது 1.3 பில்லியன் உயிரினங்கள் மற்றும் 279 மில்லியன் கிலோ தயாரிப்புப் பொருட்கள் எடையின் அடிப்படையில் பதிவாகியுள்ளன.
  • ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்கள், வனவிலங்கு வர்த்தகத்தின் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர் நாடுகளாக உள்ளன.
  • ஆசிய நாடுகள் ஏற்றுமதிப் பரிவர்த்தனைகளில் 37 சதவீதத்தையும் இறக்குமதி பரிவர்த்தனைகளில் 31 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
  • உலக ஏற்றுமதி மதிப்பில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா அதிக விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • உலகளாவியச் சட்டப்பூர்வ வனவிலங்கு (CITES மற்றும் CITES சாராத) வர்த்தகத்தினால் உருவாக்கப்படும் ஆண்டு வருவாய் சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • அனைத்து விலங்குகளிலும், ஊர்வன இனங்கள் மற்றும் மீன்களின் ஏற்றுமதியானது உலகளாவிய CITES ஏற்றுமதி பட்டியலின் சராசரி ஆண்டு மதிப்பில் 72 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்