பூமியின் அருகி வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாளானது வனவிலங்குப் பாதுகாப்பின் ஒரு பெரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது மற்றும் அருகி வரும் உயிரினங்களைப் பாதுகப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டி மக்களை ஊக்குவிக்கிறது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று நடைபெற்ற "வனவிலங்கு கடத்தல் மற்றும் வளங்காப்பு" நிகழ்வின் போது அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஹிலாரி கிளிண்டன் தலைமையிலான முயற்சிகளுடன் இந்த நாளின் அனுசரிப்பானது தொடங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation" என்பதாகும்.