உலக வனவிலங்குகள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் குறித்த அறிக்கை 2024
May 18 , 2024 189 days 242 0
போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தினால் 2024 ஆம் ஆண்டு உலக வனவிலங்குகள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2015-2021 ஆம் ஆண்டுகளில் 162 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வர்த்தகம் ஆனது சுமார் 4,000 தாவர மற்றும் விலங்கு இனங்களை பாதித்தது.
இவற்றில் 3,250 இனங்கள் CITES உடன்படிக்கையின் பின் இணைப்புகளில் பட்டியலிடப் பட்டுள்ளன.
29 சதவீதத்தில், காண்டாமிருகக் கொம்புகளுக்கான வர்த்தகச் சந்தையானது விலங்கு இனங்களில் மிகப்பெரிய பங்கினை கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து எறும்புத் திண்ணிகளின் செதில்களுக்கான வர்த்தகச் சந்தையானது 28 சதவீதமாகவும், யானை தந்தங்களுக்கான சந்தை 15 சதவீதமாகவும் இருந்தது.
உலகளாவிய சட்டவிரோத விலங்கு வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்ற விலங்கு இனங்களில் விலாங்கு மீன் (5 சதவீதம்), முதலைகள் (5 சதவீதம்), கிளிகள் மற்றும் கொண்டைக் கிளிகள் (2 சதவீதம்), மாமிச உண்ணிகள் (2 சதவீதம்), கடலாமைகள் மற்றும் நில ஆமைகள் (2 சதவீதம்), பாம்புகள் (2 சதவீதம்), கடல் குதிரைகள் (2 சதவீதம்) மற்றும் பிற (8 சதவீதம்) ஆகியவை அடங்கும்.