TNPSC Thervupettagam

உலக வர்த்தக அமைப்பின் சேவைகள் தொழில்துறை ஒப்பந்தம்

March 5 , 2024 265 days 366 0
  • உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் கீழ் சேவைத் தொழில் துறையில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க ஒப்புக் கொண்டுள்ள ஐக்கியப் பேரரசு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற 70க்கும் மேற்பட்ட நாடுகளின் நடவடிக்கைகளால் இந்தியா பயனடையும்.
  • இந்த உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர் நாடுகள் சேவை தொழில்துறை வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (GATS) கீழ் சில கூடுதல் கடமைகளை ஏற்றுக் கொள்கின்றன.
  • இது தங்களுக்குள் சரக்குப் பொருட்கள் சாராத வர்த்தகத்தை எளிதாக்குவதையும், உலக வர்த்தக அமைப்பின் மற்ற அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் இதே போன்ற சலுகைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • GATS ஒப்பந்தத்தின் கீழ் அந்நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியலின் கீழான கடமைகள் ஆனது,
    • திட்டமிடப் படாத வர்த்தக கட்டுப்பாட்டு விளைவுகளைத் தணித்தல் அல்லது
    • உரிமத் தேவைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள்,
    • தகுதித் தேவைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும்
    • தங்களுக்குள் (நாடுகளுக்குள்) பிரத்யேக தொழில்நுட்ப தரநிலைகள்
  • இந்த நடவடிக்கையானது குறைந்த-நடுத்தர-வருமானம் கொண்ட நாடுகளுக்கு 10 சதவீதமும், அதிக- நடுத்தர-வருமானம் கொண்ட நாடுகளுக்கு 14 சதவீதமும் சேவை சார் வர்த்தகச் செலவினங்களைக் குறைக்க உதவும் என்ற வகையில் இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 127 பில்லியன் டாலர் சேமிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்