சீனாவின் வளரும் நாடு என்ற அங்கீகாரத்தை மாற்றுவதற்கு உலக வர்த்தக அமைப்பின் (WTO - World Trade Organization) விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வளர்ந்த” மற்றும் “வளரும்” நாடுகளுக்கான “WTO வரையறைகள்” என்று எதுவும் தற்பொழுது வரை நடைமுறையில் இல்லை.
உறுப்பு நாடுகள் தாங்களாகவே “வளர்ந்த” மற்றும் “வளரும்” நாடுகளாக அறிவித்துக் கொள்கின்றன.
பொதுவாக நாடுகள் “வளர்ந்த”, “வளரும்” மற்றும் “குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளாக“ (LDCs - least developed countries) வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இருப்பினும், வளரும் நாடுகளுக்கு இருக்கும் சலுகைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு உறுப்பு நாட்டின் முடிவை இதர உறுப்பு நாடுகள் அந்த அமைப்பில் முறையீடு செய்யலாம்.
வளரும் நாடுகள் அங்கீகாரமானது சிறப்பு மற்றும் தனிப்பட்ட முறையில் நடத்தப் படுதலை உறுதி செய்கின்றது.
இது உறுப்பு நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிப்பாடுகளைச் செயல்படுத்த அதிகக் காலத்தை வழங்குதல், உறுப்பு நாடுகளின் வர்த்தக நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றை அனுமதிக்கின்றது.
சீனா 2001 ஆம் ஆண்டில் WTO அமைப்பில் உறுப்பு நாடாக சேர்ந்தது.
2011 ஆம் ஆண்டுவாக்கில், வளரும் நாடுகளின் மத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் முதலாவது மிகப்பெரிய விற்பனைப் பொருள் ஏற்றுமதியாளர் நாடாகவும் நான்காவது மிகப்பெரிய வணிகம்சார் சேவைகள் ஏற்றுமதியாளர் நாடாகவும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் முதலிடத்தில் உள்ள நாடாகவும் உருவெடுத்துள்ளது.