TNPSC Thervupettagam

உலக வர்த்தக அமைப்பு - உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்கள்

June 20 , 2022 761 days 356 0
  • உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடானது, மீன்பிடித்தல் குறித்த உறுதிப்பாடுகள், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளில் (IP) பகுதியளவு தள்ளுபடி மற்றும் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த உறுதி மொழிகள் உள்ளிட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
  • அதிகளவு மற்றும் அதிகபட்ச மீன்பிடிப்புக்குப் பங்களிக்கும் சில வகையான மீன்பிடி மானியங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
  • மேலும் இது சட்டவிரோதமான, தகவல்  அளிக்கப் படாத,  ஒழுங்குமுறை இல்லாத மீன் பிடிப்புக்குப் பங்களிக்கும் மானியங்களையும் நீக்குகிறது.
  • இது கோவிட் தடுப்பூசிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்