உலக வர்த்தக அமைப்பு சுமூகமாக செயல்பட வேண்டி சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கையை தயாரிப்பதற்காக உலக வர்த்தக நிறுவனத்தில் 8 முதல் 10 நாடுகளை கொண்ட ஒரு பிரிவை உருவாக்கிட இந்தியா திட்டம் தீட்டுகின்றது.
உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்பிற்குள் பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா அமைப்பாக இது செயல்படும்.
பின்னணி
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 11வது அமைச்சரவை குழுவின் கூட்டம் இந்தியாவின் முக்கிய விவகாரமான பொது உணவு சரக்கு காப்பக விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதில் அமெரிக்கா தனது உறுதிப்பாட்டிலிருந்து விலகியதனால் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வியை அடுத்து, 2018ம் ஆண்டு மார்ச் மாதம், பல தரப்பு வர்த்தக அமைப்பிற்கு புத்துயிரளித்திட உலக வர்த்தக அமைப்பின் 45 உறுப்பினர்களைக் கொண்டு ஒரு சிறிய அமைச்சரவை கூட்டத்திற்கு இந்தியா ஏற்பாடு செய்தது.