உலக வர்த்தக மதிப்பாய்வு 2023 மற்றும் கண்ணோட்டம் 2024
March 27 , 2024 241 days 353 0
சர்வதேச வர்த்தகம் ஆனது, கடந்த ஆண்டு வீழ்ச்சியை மாற்றியமைத்து 2024 ஆம் ஆண்டில் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு (UNCTAD) அமைப்பானது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
UNCTAD, உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 3 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், வளர்ச்சி பெற்று வரும் நாடுகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை முறையே சராசரியாக 5 மற்றும் 7 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதே வேளையில், வளர்ச்சியடைந்த நாடுகளின் வர்த்தகம் ஆனது இறக்குமதியில் சுமார் 4 சதவீதமும், ஏற்றுமதியில் 3 சதவீதமும் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் சரக்கு இறக்குமதியானது 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதோடு ஏற்றுமதியானது 5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டும் குறைந்தன.