உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலக வர்த்தகச் சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2005 ஆம் ஆண்டில் 2.0 % ஆக இருந்த உலக வர்த்தகச் சேவை ஏற்றுமதியின் பங்கானது 2022 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி 4.4% ஆக உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் சேவை வழங்கீட்டுத் துறையின் முக்கியத்துவமானது உயர்த்தப் பட்டுள்ளதோடு, மகத்தான வர்த்தகச் செயல்திறனையும் இது நன்கு எடுத்து உரைக்கிறது.
மருத்துவம் சார்ந்தப் பயணத்திற்கான ஒரு பிரபல நாடாக இந்தியா அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 3.5 மில்லியன் வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளனர்.