TNPSC Thervupettagam

உலக வர்த்தகச் சேவை மறுமதிப்பாய்வு 2023

August 21 , 2023 333 days 198 0
  • உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆனது, 2023 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தகப் புள்ளியியல் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வணிகச் சரக்குப் பொருட்களின் வர்த்தக அளவு 4.7% உயர்வைக் கண்டுள்ளது.
  • வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் முறையே 5.3% மற்றும் 5.8% உயர்வைக் கண்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் அதிக அளவிலான வணிகச் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி பதிவு ஆனதுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
  • இந்தியா சரக்குப் பொருட்கள் ஏற்றுமதியில் 18வது இடத்திலும், சேவைகள் சார்ந்த ஏற்றுமதியில் 7வது இடத்திலும் உள்ளன.
  • இந்தியா சரக்குகள் இறக்குமதியில் 9வது இடத்திலும், சேவைகள் சார்ந்த இறக்குமதியில் 9வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்