இத்தினமானது மே மற்றும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.
இரண்டு நாட்களில் அனுசரிக்கப் படும் இத்தினமானது பறவைகளின் வலசை போதல் நிகழ்வின் சுழற்சித் தன்மையையும், வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் வெவ்வேறு உச்சநிலை வலசை போகும் காலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டு இந்தத் தினமானது மே 11 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப் படுகிறது.
வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பின் பெரும் அவசியத்தை எடுத்துக்காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: "Protect Insects, Protect Birds" என்பது ஆகும்.