ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24ம் தேதி உலக வளர்ச்சிக்கான தகவல் தினம் (World Development Information Day - WDID) அனுசரிக்கப்படுகின்றது.
உலகின் வளர்ச்சிக்கான பிரச்சினைகளை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்க்கவும் அவற்றை சரி செய்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இது எண்ணுகின்றது.
1972ம் ஆண்டிலிருந்து இத்தினம் ஐக்கிய நாடுகள் தினத்தோடுப் பொருந்திப் போகும் வகையில் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் (The United Nations Conference on Trade and Development - UNCTAD) முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை 1972ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டு உலக வளர்ச்சிக்கான தகவல் தினத்தை ஏற்படுத்தியது.