வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு வேண்டிய சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகின்றது.
1972 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் தினத்துடன் ஒன்றிப் பொருந்துமாறு உலக வளர்ச்சித் தகவல் தினத்தை நிறுவ முடிவு செய்தது.
இது முதன்முதலில் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று கொண்டாடப்பட்டது.