உலக வானிலை அமைப்பின் ஆசிய நாடுகளில் பருவ கால நிலை 2022 அறிக்கை
August 1 , 2023 481 days 317 0
ஆசியக் கண்டமானது உலகிலேயே அதிகளவில் பேரழிவுப் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக உள்ளதோடு, 2022 ஆம் ஆண்டில் ஆசியாவில் 81 வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்பான பேரழிவுகள் காரணமாக 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்பகுதியில் நிகழ்ந்தப் பேரிடர் நிகழ்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இயற்கைப் பேரழிவுகளால் சுமார் 5,879 ஆசிய நாட்டவர்கள் இறந்து உள்ளனர்.
இது இந்தப் பிராந்தியம் முழுவதும் 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மனித இறப்புகளை விட சுமார் 55 சதவீதம் அதிகமாகும்.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டப் பேரழிவுகளால் இந்தக் கண்டத்தில் வாழும் மக்களில் 52 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 48.3 மில்லியனாகப் பதிவானப் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட சேதத்தின் பொருளாதாரச் செலவு சுமார் 36 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
இதில் குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுடன் பாகிஸ்தான் 42 சதவிகிதம் பங்கினைக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் வறட்சியினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் (7.6 பில்லியன் டாலர்கள்) ஆகும்.
இத்தகையப் பொருளாதார இழப்பானது சீனாவில் பெருமளவில் பதிவாகியுள்ளது.
சீனாவின் பொருளாதார இழப்பானது 2002 முதல் 2021 வரையிலான 20 ஆண்டு காலச் சராசரியை விட (2.6 பில்லியன் டாலர்) சுமார் 200 சதவிகிதம் தாண்டியது.