TNPSC Thervupettagam

உலக வானிலை தினம் – மார்ச் 23

March 23 , 2021 1256 days 494 0
  • இந்நாள் உலக வானிலை அமைப்பு (WMO) அமைக்கப்பட்டதை கொண்டாடுவதற்காக வேண்டி கடைபிடிக்கப் படுகிறது.
  • 1961 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் உலக வானிலை தினமானது மார்ச் 23 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டுற்கான இத்தினத்தின் கருத்துரு, பெருங்கடல், நமது காலநிலை மற்றும் வானிலை” என்பதாகும்.
  • உலக வானிலை அமைப்பு1950 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று நிறுவப்பட்டது.
  • இது ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான பெருங்கடல் அறிவியல் பத்தாண்டின் (2021-30) அறிவிப்புடன் இணைந்து வருகிறது.
  • சர்வதேச வானிலை அமைப்பு 1873 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் நடைபெற்ற முதல் சர்வதேச வானிலை மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • சர்வதேச வானிலை அமைப்பு 1950 ஆம் ஆண்டு 23 மார்ச்  அன்று உலக வானிலை அமைப்பாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்