பொழுதுபோக்கு, தகவல் அளிப்பு மற்றும் தொலைத்தொடர்பு போன்றவற்றிற்கான பயன்படு ஊடகமாக ரேடியோவைக் கொண்டாட உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 13ஆம் தேதி உலக ரேடியோ தினம் கொண்டாடப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக ரேடியோ தினத்தின் கருத்துரு - “ரேடியோ மற்றும் விளையாட்டு“ (Radio and sports).
தன்னுடைய 36 வது பொது அவை கூடலில் யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை தேசிய வானொலி தினமாக அறிவித்தது.
பின்னர் ஐ.நா. பொது அவையால் பிப்ரவரி 13 ஆனது உலக வானொலி தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2012ஆம் ஆண்டு முதல் உலக ரேடியோ தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.