2011 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் பொது மாநாடானது அதன் 36வது அமர்வில், பிப்ரவரி 13 ஆம் தேதியினை உலக வானொலி தினமாக அறிவித்தது.
இந்நாள் ஐக்கிய நாடுகள் வானொலி அமைப்பின் ஆண்டு தினத்துடன் ஒத்துப் போகிறது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஒளிபரப்புச் சேவையானது 1946 ஆம் ஆண்டில் பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இது 10வது ஆண்டு விழாவாகும்.
இந்த ஆண்டு பின்வரும் மூன்று துணை கருப்பொருள்கள் மூலம் இந்நாள் கொண்டாடப் படும்.
பரிணாமம்: உலகம் மாறுகிறது, வானொலி வளர்கிறது எனவே வானொலி உறுதியானது மற்றும் நிலையானது.
புத்தாக்கம்: உலகம் மாறுகிறது, வானொலி தன்னை மாற்றிக் கொள்கிறது மற்றும் புதுமைகளை உருவாக்குகிறது - வானொலி புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றது, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது, இது எல்லா இடங்களிலும் மற்றும் அனைவருக்கும் அணுகக் கூடியது.
இணைப்பு: உலகம் மாறுகிறது, வானொலி இணைக்கின்றது - இயற்கைப் பேரழிவுகள், சமூகப் பொருளாதார நெருக்கடிகள், தொற்றுநோய்கள் போன்றவற்றின் போது நமது சமூகத்திற்கு வானொலி தமது சேவைகளை அளிக்கின்றது.