2011 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் தேதியன்று, யுனெஸ்கோ அமைப்பானது பிப்ரவரி 13 ஆம் தேதியினை உலக வானொலி தினமாக அறிவித்தது.
1946 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் வானொலி முதன் முதலில் நிறுவப் பட்டது.
வானொலியின் முக்கியத்துவத்தைப் பேணுவதுடன், அதிகாரிகள் வானொலி மூலம் தகவல்களை அணுக வாய்ப்பளித்தலை ஊக்குவிக்கச் செய்வதற்காகவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான உலக வானொலி தினத்தின் கருத்துரு, 'வானொலி மற்றும் அமைதி' என்பதாகும்.
இந்தியாவில் முதலாவது, வானொலி ஒலிபரப்பு ஆனது 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பம்பாய் நகரின் ரேடியோ குழுமம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 479 வானொலி நிலையங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் அகில இந்திய வானொலி நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இது இந்திய மக்கள் தொகையில் 99.19% மக்களுக்குச் சேவையினை வழங்குகிறது.