வானொலியின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் கொண்டாடப் படுகின்றது.
இந்த ஆண்டு உலக வானொலி தினத்தின் கருப்பொருள் - 'வானொலி மற்றும் பன்முகத் தன்மை' என்பதாகும்.
2011 ஆம் ஆண்டில் 36வது யுனெஸ்கோவின் பொது மாநாட்டில், பிப்ரவரி 13 ஆம் நாள் உலக வானொலி தினமாக அறிவிக்கப் பட்டது.
1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகில இந்திய வானொலியானது உலகின் மிகப்பெரிய வானொலி வலையமைப்புகளில் ஒன்றாகும்.