TNPSC Thervupettagam

உலக வான் போக்குவரத்து புள்ளியியல் (WATS)

September 9 , 2018 2144 days 618 0
  • சர்வதேச வான் போக்குவரத்து மன்றத்தினால் வெளியிடப்பட்ட உலக வான் போக்குவரத்து புள்ளியியல் அறிக்கையின்படி நாட்டுரிமை (Nationality) அடிப்படையில் வான் போக்குவரத்து பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய இராஜ்ஜியம் நான்காவது இடத்தில் உள்ளது (WATS – World Air Transport Statistics).
  • இந்த அறிக்கையின்படி உலக பொருளாதார நிலைகள் மற்றும் குறைவான பயணச்சீட்டின் விலை ஆகிய காரணங்களுக்காக முதன்முறையாக இந்த ஆண்டிற்கான (2017) ஒட்டுமொத்தமாக வான்வழிப் பயணத்தை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 பில்லியனைக் கடந்துள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நடுத்தர குடிமகன் 43 மாதங்களுக்கு ஒருமுறை விமானப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி நடுத்தர குடிமகன் 22 மாதங்களுக்கு ஒருமுறை விமானப் பயணம் மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்