ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று உலக வாழ்விட தினம் கொண்டாடப்படுகிறது.
நமக்கென்று ஒரு வசிப்பிடம் அல்லது சொந்த வீடு இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
1986 ஆம் ஆண்டில், கென்யாவின் நைரோபியில் முதல் உலக வாழ்விட தினம் கொண்டாடப் பட்டது.
அந்த ஆண்டு உலக வாழ்விட தினத்தின் கருத்துரு “வாழ்விடம் எனது உரிமை” என்பது ஆகும்.