மனித நிலைகளின் மேம்பாட்டிற்கு பெரும் பங்களிக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினைப் போற்றும் வகையில் ஐ.நா சபையின் பொது அவையானது அக்டோபர் 4 முதல் 10 வரையிலான நாட்களை வருடாந்திர உலக விண்வெளி வாரமாக அறிவித்துள்ளது.
விண்வெளி வரலாற்றின் இரு முக்கிய தினங்களின் அங்கீகரிப்பை அடிப்படையாக கொண்டு இந்த விண்வெளி வாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் – 4, 1957 – மனிதனால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளான ஸ்புட்னிக் – 1 ஏவப்பட்ட நாள்.
அக்டோபர் 10, 1967 – வெளி மண்டல உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட நாள்.
இவ்வருடத்தின் விண்வெளி வாரத்தின் கருத்துரு – “விண்வெளியில் புதிய உலகங்களை கண்டுபிடித்தல்”.
உலக விண்வெளி வாரமானது உலகின் மிகப்பெரிய வருடாந்திர விண்வெளி நிகழ்ச்சியாகும்.