TNPSC Thervupettagam

உலக விமானப் படை திறன் குறியீடு 2022

May 27 , 2022 913 days 467 0
  • உலக நவீன இராணுவ விமான இயக்குநரகமானது (WDMMA) 2022 ஆம் ஆண்டின் உலக விமானப் படைத் திறன்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • உலகின் பல்வேறு நாடுகளின் பல்வேறு விமானச் சேவைகளின் மொத்தப் போர் வலிமையின் அடிப்படையில் இந்திய விமானப் படையானது (IAF) உலக வான்வழிப் பாதுகாப்புத் திறன் குறியீட்டில் மூன்றாவது இடத்தில் வைக்கப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, இந்திய விமானப் படையை (IAF) சீன விமானப்படை சார்ந்த ஆயுதப் படைகள் (PLAAF), ஜப்பான் வான்வழி சுய-பாதுகாப்புப் படை (JASDF), இஸ்ரேலிய வான்வழிப் பாதுகாப்பு சார்ந்த ஆயுதப் படைகள் மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை ஆகியவற்றிற்கு மேலான இடத்தில் வைத்துள்ளது.
  • அமெரிக்க விமானப் படையானது முதலிடத்திலும், அடுத்த இடத்தில் ரஷ்ய நாட்டின் விமானப் படையும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்