சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, விமானப் போக்குவரத்திற்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவினை 48வது இடத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்தியா இப்பட்டியலில் 102வது இடத்தில் இருந்தது.
தற்போது சிறந்த விமானப் பாதுகாப்பு வசதி கொண்ட முன்னணி 50 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தத் தரவரிசையில் சீனாவை (49) விட இந்தியா முன்னணியில் உள்ளது.
இதில் அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது.