1885 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியன்று, பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் வெறிநாய் கடித்த சிறுவனுக்கு வெறிநாய்க்கடி நோய்க்கான ஒரு தடுப்பூசியினைப் போட்டார்.
விலங்கு வழிப் பரவும் நோய்கள் (Zoonosis அல்லது Zoonotic) விலங்குகளில் இருந்து உருவாகும் தொற்றுகள் அல்லது தொற்று நோய்களைக் குறிக்கும்.
இன்று வரை நிலவும் அனைத்து நோய்களில் 60 சதவிகிதம் ஆனது விலங்கு வழிப் பரவும் இயல்புடையவையாகும்.
புதிதாக உருவாகும் நோய்த் தொற்றுகளில் சுமார் 70 சதவீதம் ஆனது விலங்குகளில் இருந்து தோன்றிபவையாகும்.