TNPSC Thervupettagam

உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 04

October 7 , 2018 2240 days 2389 0
  • உலகம் முழுவதும் விலங்குகளின் மதிப்பை உயர்த்துவதன் மூலம் விலங்குகளின் நலம் சார்ந்த தரங்களை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினம் (WAD - World Animal Day) அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினம் ஹென்ரிச் ஜிம்மர்மன் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள விளையாட்டு அரங்கில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று முதலாவது உலக விலங்குகள் தினத்தை நடத்தினார்.
  • இந்த தினமானது 1929 ஆம் ஆண்டு முதன்முறையாக அக்டோபர் 4க்கு மாற்றப்பட்டது.
  • அக்டோபர் 4 ஆம் தேதியானது விலங்குகள் நல ஆர்வலரான அசிசி பிரான்சிஸின் விருந்து தினத்தைக் குறிக்கிறது.
  • இத்தினம் 2003 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய இராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட விலங்குகள் நல அறக்கட்டளையான ‘நேச்சர்வாட்ச் பவுண்டேஷன்’ (Naturewatch Foundation) என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்