TNPSC Thervupettagam

உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 07

October 13 , 2022 682 days 249 0
  • இது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதையும், இந்த உலகத்தை விலங்குகளுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விலங்குகளுக்கு ஆதரவுக் குரல் எதுவும் இல்லாததால் அது வெகுவாக சுரண்டப் படுகிறது.
  • இந்த நாள் வளர்ப்பு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள், அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவால் அச்சுறுத்தப்பட்டவை என அனைத்திற்குமானது ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  ‘பகிரப்பட்ட கோள்’ என்பதாகும்.
  • இது 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு அதன் முதல் நிகழ்வை பெர்லினில் ஹென்ரிச் சிம்மர்மேன் என்பவர் ஏற்பாடு செய்தார்.
  • ஜெர்மனிய விலங்குப் பிரியர்களின் இதழான “மனிதனும் நாயும்” என்ற ஒரு பத்திரிகையின் வெளியீட்டாளராக ஜிம்மர்மேன் இருந்தார்.
  • அக்டோபர் 4, விலங்குகளின் புரவலரான அசிசியின் புனித பிரான்சிஸின் பண்டிகை நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
  • புனித பிரான்சிஸ் விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்காகவும் அவரது அணுகுமுறைக்காகப் பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்