உடலில் சிறுசிறு திட்டுகளாக தோல் நிறமிகளை இழக்கின்ற ஒரு நாள்பட்ட தோல் குறைபாடான விட்டிலிகோ எனப்படும் வெண் புள்ளி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்குதல் மற்றும் இந்தக் குறைபாடுடன் வாழும் தனிநபர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக என்று போராடுதல், அவர்களின் நிலைமையைப் பற்றிய ஒரு சரியான புரிதலை மேம்படுத்தச் செய்தல் ஆகியவற்றை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விட்டிலிகோ அனைத்து வயது, பாலினம் மற்றும் இனப் பின்னணியில் உள்ளவர்களைப் பாதிக்கிறது என்ற நிலையில் இந்நிலை ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.
இத்தினமானது, முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.