TNPSC Thervupettagam

உலக வெறிநாய்க்கடி நோய் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2023 327 days 117 0
  • இந்த வருடாந்திர நிகழ்வானது வெறிநாய்க்கடி நோய் தடுப்பு பற்றியும் , இந்த கொடிய நோய்க்கு எதிரான போராட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல முன்னெடுப்புகளின் முன்னேற்றத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது லூயிஸ் பாஸ்டர் அவர்களின் நினைவு நாள் ஆகும்.
  • இவர் வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான முதல் தடுப்பு மருந்தினை உருவாக்கிய பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார்.
  • இந்த நாள் ஆனது உலக வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டு கூட்டமைப்பினால் 2007 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • வெறிநாய்க்கடி நோய் ஆனது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60,000 பேரின் உயிர்களை பலி வாங்குகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "All for 1, One Health for All" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்