உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட அறிக்கை 2025
January 20 , 2025 3 days 52 0
சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO) ஜெனீவாவில் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்: போக்குகள் 2025 என்ற அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டில், உலகளாவிய வேலைவாய்ப்பு ஆனது தொழிலாளர் வளத்திற்கு ஏற்ப வளர்ச்சியடைந்ததாகவும், அது வேலைவாய்ப்பின்மை விகிதத்தினைச் சுமார் 5 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருந்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், இளையோர் வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 12.6% ஆக அதிகமாக இருந்ததால் சிறிதளவு முன்னேற்றமே பதிவாகியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியானது, 2024 ஆம் ஆண்டில் 3.2% ஆக இருந்தது, இது 2023 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் முறையே 3.3 மற்றும் 3.6% ஆக இருந்தது.
வேலை செய்ய விரும்பும் ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 402 மில்லியனை எட்டியது.
இதில் 186 மில்லியன் வேலைவாய்ப்பற்றோர், 137 மில்லியன் தற்காலிகமாக வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் வேலை தேடுவதை நிறுத்திய 79 மில்லியன் ஊக்கம் இழந்தத் தொழிலாளர்கள் அடங்குவர்.
கல்வி, வேலைவாய்ப்பு அல்லது அதன் பயிற்சியில் (NEET) இல்லாத இளையோர்களின் விகிதங்கள் அதிகரித்துள்ளன.
மிக குறைவான வருமானம் கொண்ட நாடுகளில், இளையோர்களின் NEET விகிதங்கள் பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளை விட 4 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளன.
இந்த ஒரு நிலையானது 2024 ஆம் ஆண்டில் 15.8 மில்லியன் இளைஞர்களையும் 28.2 மில்லியன் இளம் பெண்களையும் பாதித்தது.