உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம் : போக்குகள் 2023
January 25 , 2023 698 days 403 0
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம் : போக்குகள் 2023 (WESO போக்குகள்) என்ற அறிக்கையினை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டு உள்ளது.
உலகளாவிய வேலைவாய்ப்பு வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் 1% மட்டுமே இருக்கும் என்று இந்த அறிக்கை கணித்துள்ள நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவின் பாதி அளவை விட குறைவாக இருக்கும்.
உலகளாவிய வேலையின்மை அளவானது 2023 ஆம் ஆண்டில் சிறிது சிறிதாக சுமார் மூன்று மில்லியன் அதிகரித்து 208 மில்லியனாக உயரும்.
2022 ஆம் ஆண்டில், 214 மில்லியன் தொழிலாளர்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 6.4 சதவீதம் பேர் மிகவும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் உலகளவில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 47.4% ஆக இருந்த நிலையில், ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 72.3% ஆகும்.
இளைஞர்கள் (15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள்) முறையான வேலைவாய்ப்பைக் கண்டுபிடித்து அதனைத் தக்க வைத்திருப்பதில் கடுமையான சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
அவர்களின் வேலையின்மை விகிதம் வயது வந்தோர் பிரிவினரை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
ஐந்தில் ஒருவருக்கு அதாவது 23.5% இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி கிடைக்கப் பெறவில்லை.
இவை 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நேரத்தில் அதிக பண வீக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சி - போன்ற தேக்கநிலைக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளன.