TNPSC Thervupettagam

உலக வேளாண் சுற்றுலா தினம் – மே 16

May 17 , 2021 1200 days 558 0
  • இந்த ஆண்டு உலக வேளாண் சுற்றுலா தினத்தன்று சர்வதேச வேளாண் சுற்றுலா மாநாட்டினை மகாராஷ்டிர அரசின்  வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக் கழகமானது ஏற்பாடு செய்ய உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, வேளாண் சுற்றுலா மூலம் கிராமப் பெண்களுக்கு நிலையான தொழில்முனைவு வாய்ப்புகளை ஏற்படுத்துதல்” (Rural Women Sustainable Entrepreneurship Opportunities through Agri Tourism) என்பதாகும்.

வேளாண் சுற்றுலா – மஹாராஷ்டிரா

  • நாட்டின் வேளாண் சுற்றுலாத் துறையினை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் மகாராஷ்டிரா மாநிலம் முன்னோடியாக உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகாராஷ்டிரா அரசானது வேளாண் சுற்றுலாக் கொள்கையினை நிறைவேற்றியது.
  • இந்தக் கொள்கையானது சுற்றுலாப் பயணிகளுக்கு வேளாண் சார்ந்த மகிழ்ச்சி உணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதோடு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

வேளாண் – சுற்றுலா

  • வேளாண் சுற்றுலாவில் நகர்ப்புற சுற்றுலாப் பயணிகள் விவசாயிகளின் வீட்டில் தங்கியிருப்பர்.
  • அவர்கள் அங்கு தங்கியிருக்கும் போது விவசாய வேலைகள், டிராக்டர் பயணம், மாட்டு வண்டிப் பயணம் போன்றவற்றில் ஈடுபடுவர்.
  • அவர்கள் சுத்தமான விவசாய விளைபொருட்களை வாங்கிச் செல்வர்.
  • இது விவசாயிகளுக்கு ஒரு கூடுதல்  வருமானமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்