TNPSC Thervupettagam
April 13 , 2018 2419 days 1211 0
  • 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தன்னுடைய தலைநகரான போர்ட் லூயிஸ் நகரில் (Port Louis) உலக ஹிந்தி மாநாட்டின்  (World Hindi Conference)  11வது பதிப்பை  மொரிஸியஸ் நாடு நடத்த உள்ளது.
  • மொரிஸியஸ் அரசுடனான கூட்டிணைவோடு இந்திய அரசின் மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs)  இம்மாநாட்டை ஒருங்கிணைக்க உள்ளது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு “வைஷ்விக் ஹிந்தி ஆர்பாரதிய் சான்ஸ்கிரித்தி” (Vaishvik Hindi Aur Bharatiy Sanskriti) என்பதாகும்.
  • முதல் உலக ஹிந்தி மாநாடு 1975 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்றது. இதனை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி துவங்கி வைத்தார்.
  • உலக ஹிந்தி மாநாட்டின் 10வது பதிப்பு 2015 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. இதனுடைய கருத்துரு “ ஹிந்தி ஜகத் – விஷ்தார் மற்றும் சம்பாவ்னயே” (Hindi Jagat-Vistar and Sambhavnaye).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்