கணிசமான அளவு இந்து மக்கள் தொகையைக் கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள், முன்னணி கார்பரேட் நிறுவனத் தலைவர்கள் (top corporate honchos) மற்றும் மதத் தலைவர்கள் 2018 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள இரண்டாவது உலக இந்து மாநாட்டில் (World Hindu Congress-WHC) கலந்துகொள்ள உள்ளனர்.
1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற முதல் உலக இந்து மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் 125-வது வருடத்தை நினைவு கூர்வதற்காக 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 முதல் 9 ஆம் தேதி வரை இரண்டாவது உலக இந்து மாநாடு சிகாகோவில் நடைபெற உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (US Congress) முதல் இந்து சட்ட அவை உறுப்பினரான துளசி கப்பார்டு (Tulsi Gabbard) இந்த இரண்டாவது இந்து சிகாகோ மாநாட்டிற்குத் தலைவராவார்.
உலக இந்து அறக்கட்டளை (World Hindu Foundation) இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கின்றது.