ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை மற்றும் நிறுவனரான டாக்டர்.கிறிஸ்டியன் பிரெயேட்ரிச் சாமூவேல் ஹாஹ்னெமன் ( Christian Friedrich Samuel Hahnemann) அவர்களை கவுரவிப்பதற்காகவும் மரியாதை செலுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் (World Homoeopathy Day-WHD) கொண்டாடப்படுகின்றது.
இவ்வருடம் ஹோமியோபதியின் தந்தையான டாக்டர்.கிறிஸ்டியன் பிரெயேட்ரிச் சாமூவேல் ஹாஹ்னெமன் அவர்களின் 263வது பிறந்த நாள் வருடமாகும்.
இந்த இருநாள் மாநாட்டின் கருத்துரு” 40 ஆண்டுகளிலிருந்து இதுவரை புத்தாக்கம், பரிணாமம், முன்னேற்றம், அறிவியல் ஆய்வு ( “Innovate: Evolve, Progress: Exploring Science since 40 years”)
இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 2018-ஆம் ஆண்டிற்கான உலக ஹோமியோபதி தினம் மீதான அறிவியல் மாநாட்டை புதுதில்லியில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் (Ministry of AYUSH) இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
ஹோமியோபதி மருத்துவ முறையனது 1796 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்த டாக்டர்.கிறிஸ்டியன் பிரெயேட்ரிச் சாமூவேல் ஹாஹ்னெமன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.