ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை அன்று உலக கடல்சார் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
கப்பல் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதற்காக இத்தினக் கொண்டாட்டங்கள் நடத்தப் படுகின்றன.
இத்தினமானது உலகின் பொருளாதாரத்திற்கு அதிலும் குறிப்பாகக் கப்பல் போக்குவரத்திற்கு சர்வதேச கடல்சார் தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கின்றது.
சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation - IMO) ஒப்பந்தத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது 1978 ஆம் ஆண்டில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
IMOவின் தற்போதையப் பொதுச் செயலாளர் கிடாக் லிம் ஆவார்.
இந்த ஆண்டிற்கான உலக கடல்சார் தினத்தின் கருத்துரு, "கடல் சமூகத்தில் பெண்களை மேம்படுத்துதல்" என்பதாகும்.