TNPSC Thervupettagam

உலகக் கல்விக் கண்காணிப்பு அறிக்கை 2023

July 29 , 2023 357 days 187 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, ‘கல்வியில் தொழில்நுட்பம்: கல்வி சார் விதிமுறைகள் பற்றிய செயற்கருவி’ என்ற தலைப்பிலான 2023 ஆம் ஆண்டு உலகளாவிய கல்விக் கண்காணிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • “தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் கற்றலை மேம்படுத்தாத நிலையில் அல்லது அது மாணவர்களின் நல்வாழ்வை மோசமாக்குதல்” போன்ற சூழ்நிலைகளில் பள்ளிகளில் திறன்பேசிகளின் பயன்பாட்டினைத் தடை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  • கைபேசிச் சாதனமானது மாணவர்களிடம் இருப்பது, 14 நாடுகளில் மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும், கற்றலில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் காரணமாக உள்ளது என கண்டறியப் பட்டது.
  • தற்போது, நான்கில் ஒரு நாடுகளே பள்ளிகளில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.
  • 16% நாடுகள் மட்டுமே கல்வியில் தரவுத் தனியுரிமைக்கு வெளிப்படையாக சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கின்றன.
  • உலகக் கல்விக் கண்காணிப்பு அறிக்கையானது 2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்