ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மற்றும் சர்வதேச திடக்கழிவு சங்கம் (ISWA) ஆனது '2024 ஆம் ஆண்டு உலகக் கழிவு மேலாண்மை கண்ணோட்ட அறிக்கையினை' சமீபத்தில் வெளியிட்டது.
நகர்ப்புற திடக்கழிவு ஆனது 2050 ஆம் ஆண்டிற்குள் 2.3 பில்லியன் டன்னில் இருந்து 3.8 பில்லியன் டன்னாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தெற்கு மற்றும் உலகின் வளர்ந்து வரும் பகுதிகளில் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை.
இந்த 2.7 பில்லியனில் இரண்டு பில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்ற நிலையில், அதில் 700,000 பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
உலகின் மொத்தக் கழிவுகளில் 27 சதவீதத்திற்குச் சமமான சுமார் 540 மில்லியன் டன் அளவு நகராட்சி திடக்கழிவுகள் சேகரிக்கப்படுவதில்லை.
2020 ஆம் ஆண்டில், கழிவு மேலாண்மைக்கான உலகளாவிய நேரடிச் செலவினம் 252 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டில், இந்த உலகளாவிய வருடாந்திரச் செலவினம் சுமார் இரு மடங்காக 640.3 பில்லியன் டாலர்களாக இருக்கும்.