TNPSC Thervupettagam

உலகக் காற்றுத் தரக் குறியீடு 2023

March 23 , 2024 118 days 217 0
  • 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது அதிக மாசுபட்ட நாடாக இருந்தது.
  • இது 134 நாடுகளில் உள்ள 7,812 இடங்களில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் 73.7µg/m3 மற்றும் வங்காளதேசத்தின் 79.9µg/m3 என்ற காற்றுத் தர மதிப்புடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வருடாந்திர நுண்மத் துகள் மாசுபாடு (PM) 2.5 54.4µg/m3 ஆக இருந்தது.
  • இந்தியாவின் வருடாந்திர சராசரி PM 2.5 மாசுபாடு, 2022 ஆம் ஆண்டில் 53.3µg/m3 ஆக இருந்ததையடுத்து, மிகவும் மாசுபட்ட 8வது நாடாக இருந்தது.
  • புது டெல்லி (92.7µg/m3) உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக இருந்தது.
  • இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக பெகுசராய் (118.9µg/m3) இருந்தது. அதைத் தொடர்ந்து கௌகாத்தி (105.4µg/m3) இடம் பெற்றிருந்தது.
  • டெல்லி ஒன்றியப் பிரதேசத்தில் PM 2.5 மாசுபாட்டின் சராசரி செறிவு 102.1µg/m3 ஆக உள்ள நிலையில் இது உலகின் மிகவும் மாசுபட்ட மூன்றாவது நகரமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்