TNPSC Thervupettagam

உலகக் குருதிக் கொடையாளர் தினம் - ஜுன் 14

June 14 , 2019 1992 days 639 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 14 அன்று உலகம் முழுவதும் உலக குருதிக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுகின்றது
  • இந்த நிகழ்வு, உயிர் காக்கும் இரத்தத்தைத் தானாகவே முன்வந்து கொடுக்கும் குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துகின்றது. இது தொடர்ந்து இரத்தம் வழங்குதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • இந்த ஆண்டின் உலகக் குருதிக் கொடையாளர் தினத்தை நடத்தும் நாடு ருவாண்டா ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான பாதுகாப்பான இரத்தம்” என்பதாகும்.
  • 58-வது உலக சுகாதார சபை ஜீன் 14 ஆம் தேதியை வருடாந்திர அளவில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சியாக உலகக் குருதிக் கொடையாளர் தினத்தைத் தேர்ந்தெடுத்தது.
  • இது 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • உலக சுகாதார தினம், உலக காசநோய் தினம், உலக நோய்த் தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை எதிர்ப்புத் தினம், உலக கல்லீரல் அழற்சி தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தினம் போன்ற உலக சுகாதார அமைப்பினால் நடத்தப்படும் 8 சர்வதேச பொதுச் சுகாதாரப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்